மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய யானை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபயிற்சி சென்ற கோமதி யானை பள்ளி மைதானத்தில் இருந்தவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் உள்ள கோமதி யானை கடந்த 22 ஆண்டுகளாக அந்த கோவிலில் உள்ளது.

 

அங்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடப்பதால் கோமதி யானை அங்குள்ள அரசு மைதானத்தில் வழியே நடை பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது அங்கு கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கண்ட கோமதி யானை அங்கு உற்சாகமாக பந்து விளையாடியது. மாணவர்களும் பந்தை உருட்டிவிட லாவகமாக இடது காலில் உதைத்து விளையாடியது.

 

பின்னர் அங்கிருந்த பொருட்களை பறித்துத் தின்ற கோமதி யானை கோவிலுக்கு திரும்பியது.


Leave a Reply