குளுகுளுவென்று ஏசி இயந்திரத்திற்குள் பாம்பு !
கடலூர் நந்த வெளியில் ஏசி இயந்திரத்திற்குள் இருந்த பாம்பு பிடிக்கப்பட்டது. நவீன் என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரத்தில் பாம்பு இருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக செல்லா என்பவருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் அளித்தார்.
அங்கு அவர் வந்து ஏசிக்குள் இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டார். ஏசியை பொருத்திய பின் சுவற்றில் இருக்கும் துளைகளை சரியாக மூட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பாம்பு போன்றவை குளிர்ச்சிக்காக உள்ளேயே தங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




