தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார்; அவருக்கு வயது, 87.
நெல்லை மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த டி.என்.சேஷன், கடந்த 1955 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் . கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
கடந்த 1990- 96 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்தார். அப்போது இவர் எடுத்த பல அதிரடி நடவடிக்கைகள் தான், தேர்தல் ஆணையருக்கான அதிகாரங்களை தெரியப்படுத்தின. ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்து, மக்களின் பாராட்டை பெற்றார்.
இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.என்.சேஷன் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.