எம்.பி பாரிவேந்தரின் சாலை விரிவாக்க கோரிக்கை: நிதி ஒதுக்கியதாக நிதின் கட்கரி பதில்

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே சென்னை சேலம் விரைவுச்சாலை திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

தாம்பரம் திண்டிவனம் இடையே வாகன நெருக்கடி அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் இரும்புலியூர் பகுதி வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி இடையேயான சாலையை 8 வழிப்பாதையாக 56 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக பெரம்பலூர் எம்பி பாரிவேந்தருக்கு எழுதியிருக்கும் பதில் கடிதத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply