கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பத்ராவின் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பத்ராவை கைது செய்த காவல்துறையினர் அவரின் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்