நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று, தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது.
இதே நவம்பர் மாதம் 9-ம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, அதேபோல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நவம்பர் 9-ம் தேதியும் வரலாற்றில் நினைவு கூறப்படும்.
நமது ஜனநாயகம் எவ்வளவு பல பொருந்தியது என்று உலகமே கண்டுள்ளது. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை.
நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும். தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது. ஒட்டு மொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.