--- --:--:-- --

மருத்துவத்தின் 2-வது தலைநகராக மதுரை விளங்குகிறது :விஜயபாஸ்கர்

22

மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக மதுரை விளங்கி வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டறியும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன சிடி ஸ்கேன் வசதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

 

பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த ஆண்டிற்குள் அதிநவீன ஸ்கேன் வசதியை சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.

 

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடை பெறுவதாக கூறியவர், தென்னிந்தியாவின் முதல் முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்க அதிநவீன ஸ்கேன் கருவியை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon