தொடரும் வழக்கறிஞர்- போலீஸ் மோதல்! ராஜஸ்தானில் இரு தரப்பினரும் கைகலப்பு

டெல்லியை போலவே, ராஜஸ்தானிலும் வழக்கறிஞர்கள்- காவல்துறையினர் இடையே மோதல் உண்டானது.

 

டெல்லியில் திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2ஆம் தேதி, காவல் துறையினர் – வழக்கறிஞர்கள் இடையே மோதம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்துகிற அளவுக்கு நிலைமை மோசமானது.

 

இதில், இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்தனர். 14 மோட்டார் சைக்கிள்களும், போலீஸ் கார் ஒன்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 8 சிறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மோதல் தொடர்பாக ஒரு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த மோதல் குறித்து, டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் தலைமையிலான குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் நேற்று ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இச்சூழலில், டெல்லியை போலவே ராஜஸ்தான் மாநிலம் அல்வார் கீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இது, அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply