அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி திரட்டும் பள்ளிக் கல்வித் துறை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்திட பொதுமக்கள் பங்களிக்க பள்ளிக்கல்வித்துறை இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. contribute.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எந்தெந்த பள்ளிக்கு என்னென்ன வசதிக்காக எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்து பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் தங்கள் விரும்பும் பள்ளிக்கு விரும்பும் தொகையை அளிக்கலாம்.

 

நேற்று தொடங்கப்பட்ட இணையதளம் மூலம் இதுவரை 21 பேர் 96 ஆயிரத்து 769 ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த 17 ஆயிரத்து 894 பள்ளிகளை மேம்படுத்த உள்ளதாக இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply