திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவேறு பள்ளிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திருக்குறளின் மொத்த குறளையும் எழுதச்சொல்லி போலீசார் தண்டனை வழங்கியுள்ளனர்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் வெளியிட்ட டிக்டாக் வீடியோவின் அடிப்படையில் தகராறில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் அவர்களின் பெற்றோருடன் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களுக்கு தண்டனையாக 1330 குறளையும் போலீசார் எழுத வைத்தனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை
கந்துவட்டி கொடுமை- புதுச்சேரியில் மூதாட்டி தற்கொலை






