“சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்துங்கள்” – ஸ்டாலின் சாடல்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை காவிக் கூட்டம் தங்களது கட்சிக்கு கச்சை கட்ட துணைக்கு அழைப்பது தமிழ் துரோகம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர் எத்தனை வர்ணம் பூசினாலும் பாரதிய ஜனதாவின் காவி வர்ண சாயம் வெளுத்து விடும் என்று அவர் சாடியிருக்கிறார். ஆகவே சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளைப் படித்து திருந்த பாருங்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கும் ரசீதில் தமிழ் மொழியை இடம்பெற செய்ய வேண்டும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் பேசியபோது முகஸ்டாலின் இவ்வாறு கூறினார்.


Leave a Reply