சிகிச்சை என்ற பெயரில் சிறுமி மீது அமிலத்தை பூசிய போலி வைத்தியர்

திருப்பூர் அருகே பரம்பரை வைத்தியர் என்ற போர்வையில் 13 வயது சிறுமி மீது அமிலத்தைப் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி தனபால், ராஜேஸ்வரி தந்தையின் இரண்டாவது மகள் தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்தார்.

 

நீண்ட நாள் மருத்துவம் பார்த்தும் குணமாகாத நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வைத்தியர் மருது மகேந்திரனை அனுகியுள்ளனர். கொல்லிமலையில் இருந்து கொண்டு வந்த அபூர்வ மூலிகை மூலம் தோல் வியாதியை குணமாக்குவதாக கூறி சிறுமியின் மீது மருந்தை பூசியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தோளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவரை அணுகியுள்ளனர்.

 

அப்போது சிறுமியின் மீது பூசப்பட்டது மருந்து அல்ல, டைல்ஸ் கற்களில் பயன்படுத்தப்படும் ரெட் ஆசிட் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான வைத்தியரை தேடி வருகின்றனர்.


Leave a Reply