--- --:--:-- --

ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால், பதிலடியாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்

download (4)

ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால் அதற்கு பதிலடியாக 10 எதிரிகள் கொள்ளப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்ப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் சாடினார் 370ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்து இருப்பதாகவும் இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஒரு வீரர் உயிரிழந்தார். அதற்கு பதிலாக எதிரிகள் பத்து பேர் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அடைந்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 

பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மறைமுகமாக குறிக்கும் அவர் இதனை தெரிவித்தார் காங்கிரஸ் கூட்டணியையும் சாடிய அமைச்சா் முன்பு மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தபோது இந்த கூட்டணி செய்த பணிகள் என்ன என்று வினவினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon