இன்ஸ்டாகிராமில் பாலோவிங் என்ற தொடர்பு வசதி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இனி யாரை வேவு பார்ப்பது என சில பயனர்கள் தங்களின் புலம்பல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அதில் பல்வேறு மாற்றங்களை இன்ஸ்டாகிராம் மேற்கொண்டு வருவதாகவும் ஆகஸ்ட் முதல் ஆக்டிவிட்டி பக்கத்திலிருந்து சில பயனர்களுக்கு படிப்படியாக நீக்கப்பட்டு வந்த வசதியை அனைவருக்கும் நீக்குவதாகவும் கூறியுள்ளது.
அவர்கள் எதை லைக் செய்கிறார்கள் எதற்கு கருத்து விடுகின்றனர். யாரை பின் தொடர்கின்றனர் என காட்டும் சாலையில் வசதி இணை இல்லை என்று சில பயனர்கள் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இனி எந்தப் பெண் யாருடன் சண்டையிடுகிறார்.
யார் யாரை க்ரஷ்ஷாக பார்க்கிறார் எனவே வேவு பார்க்க முடியாதே என சிலரும் வேவு பார்க்கும் வேலையை விட்டு சொந்த வேலையில் கவனம் செலுத்தலாம் என்று சிலரும் கருத்து கூறி வருகின்றனர். யாரும் வேவு பார்க்கும் தொல்லை இன்றி நிம்மதியாக வாழலாம் என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.