இருசக்கர வாகன திருடனை பொது மக்கள் அடித்ததால் உயிரிழப்பு!
தேனி மாவட்டம் போடியில் பொதுமக்கள் தாக்கியதில் இரு சக்கர வாகனத்தில் உடன் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகே இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் அங்கு வந்த ஒருவர் அந்த வாகனத்தை திருடிச் சென்றார். அதைக் கண்ட பொதுமக்கள் அவரை துரத்தி சென்றனர் போடிமெட்டு படியாத கேரளா செல்ல முயன்ற போது வழியில் இருசக்கர வாகனம் நின்று விடவே தப்பியோடியுள்ளார்.
அந்த நபர் அந்த நபரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அடித்து உடைத்துள்ளனர். இதன் காரணமாக அவர் மயக்கம் அடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் போடி அருகே ரொம்ப சேரியை சேர்ந்த பாபு என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
கேரளாவில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பாபுவின் மீது இருசக்கர வாகன திருட்டு கஞ்சா விற்பனை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன உயிரிழப்பு தொடர்பான சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதய நோயாளியான பாபு பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உடற்கூறு ஆய்வின் மூலம் தெரிய வரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




