நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகள் நடத்தும் லோன் மேளாக்கள் தொடக்கம்

பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் பண்டிகைக்கான நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து 250 மாவட்டங்களில் வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் தொடங்கின.லோன் மேளாக்கள் என்ற பெயரில் பல்வேறு வகையான கடன்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை வரும் 6ஆம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் நடத்த உள்ளன.

 

இந்த நான்கு நாட்களில் நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகள் பொதுமக்களுக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் தாராளமாக கடன் வழங்க உள்ளன. முதற்கட்ட லோன் மேளாவில் 250 மாவட்டங்களில் முன்னோடியாக உள்ள வங்கிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீடு, வாகனம், கல்வி, விவசாயம், வணிகம், தனிநபர் என பல்வேறு நோக்கங்களுக்காகவும் கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

இதுபோன்ற முகாம்கள் நடைபெறுவது தொடர்பாக மக்களுக்கு தகவல் தெரிவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர். முதற்கட்டமாக 250 மாவட்டங்களில் நடைபெறும் லோன் மேளா அடுத்த கட்டமாக அக்டோபர் 21ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நான்கு நாட்கள் 150 மாவட்டங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுத்துறை வங்கிகள் தவிர நிதி சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இம்முகாம்களில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையை சீர் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக அலோன் விழாக்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply