காரின் நான்கு சக்கரத்தை மட்டும் திருடி சென்ற கில்லாடி !
சென்னை பாடி அருகே சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய காரின் நான்கு டயர்களை திருடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். பாடி டிவிஎஸ் காலனியை சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு காரை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார்.
காலை வந்து பார்த்த பொழுது காரை நான் பெயர்களையும் யாரோ திருடிச் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




