அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்பு

அரசு பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடுத்த நீலாம்பூர் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்தமாதம் முதல் அரசுப் பள்ளிகளில் தற்காப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கூறினார். அரசு பள்ளி மாணவர் இரு மரங்களை நட வேண்டும் என்றும் அதற்காக மதிப்பெண் வழங்குவது குறித்து முதல்வரிடம் பேசி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Leave a Reply