விரைவில் பாஜகவில் ஐக்கியமாகும் நடிகை விஜயசாந்தி

நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997இல் பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய விஜய் சாந்தி பின்னர் கட்சியில் இருந்து விலகினார் 2005 ஆம் ஆண்டில் டெல்லி தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கி அவர் பின்னர் அக்கட்சியை தெலுங்கானா ராஷ்டிரத்துடன் இணைத்தார் .அக்கட்சியின் சார்பில் கடந்த 2009ஆம் ஆண்டு பகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

 

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு அவர் தெலுங்கானா ராஷ்டிர கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்த இந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


Leave a Reply