மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் அறிவிப்பு !!!

மத்திய அரசிடம் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்படுவதாக ஜவுளித்தொழில் முனைவோர் கோவையில் அறிவித்துள்ளனர்.கோவையில் இந்திய ஐவுளி தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் கோரிக்கைகள் குறித்து அடுத்த வாரம் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து தெரிவிக்க இருப்பதாகவும், ஜவுளிதொழிலுக்கு தேவையான கோரிக்கைகளை ஒன்றாக பேசி முடிவு செய்து வருமாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சரும்,நிதி அமைச்சரும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,இதனை தொடர்ந்து தேவையான கடன் சீரமைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர். இதே போன்று 3 மாதம் ஒரு முறை ஜவுளித்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் ஓன்று கூடி விவாதிக்க இருப்பதாகவும், இதன் மூலம் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை உ ருவாக்க முடியும் என்றும், இதற்காக தென்னிந்திய அளவில் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த கமிட்டியில் அனைத்து ஜவுளி சங்கங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும்,ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி , ஜி.எஸ்.டி என தனித்தனியாக முன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாகவும்,துணி, நூல் ஏற்றுமதியை ஊக்குவிக்க சில சலுகைகளை கேட்க இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழக மின்துறை அமைச்சர் உட்பட சிலரையும் சந்தித்து கோரிக்கைகளை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்,இதில் இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப பிரபு தாமோதரன், கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வராஜ், கழிவுப் பஞ்சாலைகள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply