அரசியல் வேண்டாம் என ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

அரசியலைவிட்டு ரஜினியும் கமலும் விலகியிருக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சிறப்பான வரவேற்பை பெறும் என்று தான் நம்புவதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் சிரஞ்சீவி தெரிவித்தார். மிகவும் நுண்ணுணர்வு மிக்க மனிதர்களுக்கு அரசியல் ஏற்ற இடமில்லை என்றும் இன்றைய அரசியல் பணபலம் சார்ந்தது என்றும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினியும் கமலும் தன்னைப் போலவும் பவன்கல்யாண் போலவும் தோல்வியை சந்திக்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக கூறிய சிரஞ்சீவி அரசியலில் நீடித்து மக்களுக்கு சேவையாற்ற நிறைய தோல்விகளையும் அவமானங்களையும் தாக்கிக் கொள்ள வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.


Leave a Reply