மின்கம்பிகளில் சிக்கிய குரங்குக்குட்டியை மீட்க குரங்குகள் நடத்திய பாசப்போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மின்கம்பிகளில் சிக்கித் தவித்த குரங்கு குட்டி தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. மணப்பாறையில் அபூபக்கர் தெருவில் உள்ள மின் கம்பத்தில் குரங்கு குட்டி மின் கம்பிகளில் சிக்கிக்கொண்டது. உடனிருந்த குரங்குகள் இதனை கண்டதும் பதறி அந்த குரங்கு குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.

 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். மின்வாரியம் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தது. அதனைத் தொடர்ந்து நிகழ்வு இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குரங்கு குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடன் இருந்த குரங்கு கூட்டம் அவர்களை குரங்கு குட்டிகள் செலவிடாமல் சூழ்ந்துகொண்டது.

 

பின் தீயணைப்பு வீரர்கள் குரங்கு கூட்டத்தை விரட்டி நிலையில் மற்ற வீரர்கள் ஏணி வைத்து ஏறி குரங்கு குட்டியை பத்திரமாக மீட்டனர். உயிர் தப்பிய குரங்கு குட்டியை தாய் குரங்கு பாசத்துடன் அணைத்துக் கொண்டது இந்நிகழ்வை கண்டவர்கள் குரங்குகளின் பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தனர்.


Leave a Reply