உத்தரபிரதேசம் அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்து கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் என மாநில அரசின் விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளது. கோரக்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் கடந்த 2014ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான மூளை காய்ச்சல் சிறப்பு வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 63 குழந்தைகள் அடுத்தடுத்த இரு தினங்களில் உயிரிழந்தனர்.
இதற்கு மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு பிரிவு மருத்துவர்கள் தான் காரணம் என்றும் அவர்தான் நிலைமையைப் புரிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் குழந்தைகள் உயிரிழக்க கபில் கவனக்குறைவு தான் காரணம் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை எனக்கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திவந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு உத்திரபிரதேசம் அரசிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கபில் மூளைக்காய்ச்சல் வார்டு பிரிவின் அதிகாரி இல்லை எனவும், சம்பவம் நடந்த ஆகஸ்ட் என்று அவர் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சி பெற சென்று இருந்ததாகவும் எனவே குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.