இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஐஏஎஃப்‌எல் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற ஆய்வின் அறிக்கையின்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

 

ஹிந்து சகோதரர்கள் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், விப்ரோ நிறுவன அசீம் பிரேம்ஜி ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 500 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், உள்ளனர் தொழில் அதிபர் எல்‌ என் மிட்டல் ஒரு லட்சத்து ஆயிரத்து 300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், கௌதம் அதானி 94 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.


Leave a Reply