இந்தியாவில் முதலீடு செய்ய முன்வாருங்கள்: மோடி அழைப்பு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது புரட்சிகரமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் நகரில் முன்னாள் மேயர் மைக்கெலை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற குளோபல் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் இந்தியாவில் வரும் ஆண்டுகளில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1.3 ட்ரில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என தெரிவித்தார். மேலும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவில் சமூக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மிகப்பெரிய உள்கட்டமைப்பை சுற்றுச்சூழலையும் கொண்ட இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

 

இந்தியாவில் வணிக சூழலை ஏற்படுத்துவதற்காக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஒரு நேர்மறையான செய்தி சொல்லப் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை, தீர்க்கமான தன்மை, தேவை ஆகிய நான்கு காரணிகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான சூழலை தந்துள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Leave a Reply