திருவாடானையில் ஓரியூர் வர இருக்கும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு எதிர்ப்பு, அமைதி பேச்சு வார்த்தை தோல்வி

திருவாடானை அருகே ஓரியூர் வர இருக்கும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கு எதிர்ப்பு, அமைதி பேச்சு வார்த்தை தோல்வி, பதட்டம் நிலவுகிறது.திருவாடானை அருகே ஓரியூரில் உள்ள ஆலய அர்ச்சிப்பு விழாவிற்கு வரஇருக்கும் மறைமாவட்ட ஆயருக்கு கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு, அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியால். அப்பகுதியில் பதட்டம்,ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை அருகே ஓரூர் என்ற ஓரியூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது.

 

இந்த ஆலயத்தில் சில பகுதிகளை புதிப்பித்துள்ள நிலையில் இதற்கு அர்ச்சிப்பு செய்ய சிவகங்கை மறை மாவாட்டத்தின் தலைவர் பேராயர் சூசைமாணிக்கம் வரஇருக்கிறார். ஏற்கனவே திருவாடானை பகுதியில் குருபட்டம் முடித்த தலித் மாணவர் மைக்கேலுக்கு குருபட்டம் வழங்காத நிலையில் தொடர்ந்து பலவேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் ஓரியூர் சர்ச் அருகே சார்லஸ் என்பவர் மர்ம்மான முறையில் இறந்து போனார். அதனால் இப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தலித் குறிஸ்தவ மக்கள் மீது வழக்குகள் போட்டு நிலவையில் உள்ளது. அதனால் பல்வேறு அமைதிப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு . அதில் சாலஸ் இறப்பு பற்றி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது போட்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும், தலித் மாணவருக்கு குருபட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 

இந்த கோரிக்கைகள் எதைமயும் நிறைவேற்றவில்லை எனவும் எனவே அதுவரை சிவகங்கை மறை மாவட்ட பேராயர் ஓரியூர் வருதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் எனஇப்பகுதி தலித் குறிஸ்த கூட்டமைப்புக்கள் திருவாடானை வட்டாச்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்த நிலையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி கூட்டத்திற்கு செவ்வாய் கிழமை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ஓரியூர் ஆலயத்தில் இருந்து வரவில்லை அதனால் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் புதன் கிழமை வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. அதனால் தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பினர் ஆயர் சூசை மாணிக்கம் இன்று வியாழக்கிழமை ஒரியூர் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரவித்தார்கள் இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவிவருகிறது.


Leave a Reply