விறு விறு விஜயகார்த்திகேயன்.. அதிகாரிகள் வெடவெடப்பு! திருப்பூர் புதிய கலெக்டருக்கு பொதுமக்கள் வாழ்த்து!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விஜய கார்த்திகேயன் இன்று காலை 7.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்கள் தங்கள் பொது பிரச்சினைக்காக எப்போதும் அணுகலாம் எனவும், மாநில அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்

 

முன்னதாக திருப்பூர் வருகைக்கு முன்பாக சமூக வலை தளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இதுவரை பணிபுரிந்த பகுதிகளில் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு தான் திருப்பூருக்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்கும் முன்பாகவே தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவியதையடுத்து பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகைதந்த அன்றே, பிளாஸ்டிக் பயன்பாடுகள் எவ்வாறு செயல்பாட்டில் உள்ளன என்பது குறித்து அறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டார். புதிய ஆட்சியரின் சுறுசுறுப்பு சோதனையால் அதிகாரிகள் வெடவெடபில் உள்ளனர்.


Leave a Reply