--- --:--:-- --

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி

13

நீட் தேர்வு எழுதுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 412 மையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது. அந்த மையங்களில் காலாண்டு தேர்வு விடுமுறையின் போது நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் அதன்படி இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

குஜராத்தை சேர்ந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அரசு ஆசிரியர்களை கொண்டு நீர் மற்றும் ஜெ‌இ‌இ தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரையிலும் பிற்பகல் 1.10 மணிமுதல் மாலை 4.20 மணிவரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முந்தைய நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வு மற்றும் ஜெஇ‌இ பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 32 மாவட்டங்களிலும் 370 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon