பெண் உதவி பேராசியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன்

சென்னையில் பெண் உதவிப்பேராசிரியர் மிரட்டி ஆபாச புகைப்படம் எடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஷ்வேஷ் அம்பத்தூரில் பணிபுரிந்த படி தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் பணிபுரிந்த உதவி பேராசிரியர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.

 

படிப்பு நிறைவு பெற்றதாகவும் அதனால் பார்ட்டி தருவதாகவும் கூறி பேராசிரியர் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருட்டான பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு உதவிப் பேராசிரியரை மிரட்டி நிர்வாணமாக்கி செல்போனில் படம் எடுத்துக்கொண்டு ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் புகார் அளித்ததால் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Leave a Reply