திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சோனியாகாந்தி, மன்மோகன் சிங்..!

ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினார். அவர்களுடன் சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான கார்த்தியும் உடனிருந்தார். சந்திப்பின்போது சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து சோனியாவும் மன்மோகனும் கேட்டிருந்தனர்.

 

சிதம்பரத்தை வெளிக்கொண்டு வருவது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்புக்கு பிறகு சிதம்பரத்தில் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் சோனியா காந்தியும் மன்மோகனும் தன்னை சந்தித்தது தனக்கு மகிழ்ச்சி தந்திருப்பதாக சிதம்பரம் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி வலிமையாகவும் துணிச்சலுடனும் இருக்கும் வரை நானும் அவ்வாறாகவே இருப்பேன் எனவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்பின்மை, வேலை இழப்பு, குறைவான கூலி, கூட்டு வன்முறை ,காஷ்மீர் மக்கள் சிறைவைப்பு எதிர்க்கட்சியினரை சிறையில் தள்ளுவது போன்றது தவிர நாடு நல்ல நிலையில் இருப்பதாக சிதம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Leave a Reply