மதுரையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் மறுமணம் செய்து வைத்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினரே கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அனுமார் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாலமுருகன் கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து மகேஸ்வரி தனது கணவர் பாலமுருகனின் சித்தி மகனான கௌதம் என்ற இளைஞனை மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகனின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார் ராஜா ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 20ஆம் தேதி மகேஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தனர்.படுகாயமடைந்த மகேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனை தொடர்ந்து மகேஸ்வரியின் இரண்டாவது கணவர் கௌதமி நண்பரான குருநாத சேதுபதி என்பவரை கடந்த 21ம் தேதி மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது மகேஸ்வரி மறுமணம் செய்ய உதவி செய்ததால் குருநாத சேதுபதியை ஜெயக்குமார் அனுப்பிய கூலிப்படையினர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஜெயக்குமார் விஜயபாண்டி உள்ளிட்ட 9 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.