‘பிகில்’ போஸ்டருக்கு கறி வியாபாரிகள் எதிர்ப்பு.!

விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இறைச்சி வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இறைச்சி வியாபாரிகள் தங்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என மனு அளித்தனர்.

 

அதில் இறைச்சி வெட்டும் கட்டையின் மீது நடிகர் விஜய் செருப்பு காலை வைத்திருப்பதாகவும் தெய்வமாக மதிக்கும் பொருளின் மீது விஜய் கால் வைத்திருப்பது இறைச்சி வியாபாரிகள் வேதனை அடையச் செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply