யூடியூபைப் பார்த்து டின்னில் பாப்கார்ன் செய்த சிறுமி மரணம்

சீனாவில் யூடியூபே பார்த்து டின்னில் பாப்கான் செய்த 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் வீடியோ பதிவாளர் மன்னிப்புக் கோரியுள்ளார். யா என்ற பெண் யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 4. கோடி பின்தொடர்பவர்கள் கொண்டுள்ளார். அவர் காலியான பெப்சி டின்னை கொண்டு பாப்கான் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த 14 வயது சிறுமி தனது தோழியுடன் சேர்ந்து அதேபோல் பாப்கான் செய்ய முயற்சித்தார். ஆனால் ஆல்கஹால் பயன்படுத்துவதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 93 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட சிறுமி இரண்டு கால சிகிச்சை பலனளிக்காமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தோழி 13 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமியின் உயிரிழப்புக்கு யூடியூபில் வீடியோ போட்ட வீடியோ பதிவு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். அந்த இளம்பெண் இழப்பீடு வழங்கவும் முன் வந்துள்ளார். எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது தன் தவறுதான் என்றாலும் சிறுமிதான் பயன்படுத்திய கருவிகளை பயன்படுத்தவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.


Leave a Reply