டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி செல்லும் வழியில் ஜெர்மனியின் விமான நிலையத்தில் இறங்கினார். அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் அமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியின் விமான நிலையத்தில் பிரதமர் மோடி சென்ற விமானம் சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை ஜெர்மன் நாட்டின் இந்திய தூதர் தூதரக அதிகாரி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு பிரதமர் மோடியின் விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இன்று முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முக்கியமாக கூட நகரில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இணைந்து பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.