நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் போலீசார் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசனின் மகனான உதித் சூர்யா. தனக்கு பதில் வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து கல்லூரியில் சேர்ந்து உள்ளதாக கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் வந்தது.
இதனையடுத்து மாணவர் உதித் சூர்யா மீது கானாவிலக்கு காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அவரிடம் போலீசார் கடிதம் மூலம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டுள்ளனர்.