இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கோரைக் கூட்டம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் -முருகவள்ளி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ்-22 என்ற இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் உடல் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறால் பண்ணை உரிமையாளர் சுப.முனியசாமி, துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது


Leave a Reply