தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டி இருக்கக்கூடிய பக்கத்தில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது.

 

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி யானது காற்றின் சுழற்சி. அது சுற்றிக் கொண்டே உள்ளது. அது சுற்றிக்கொண்டு உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் காற்று ஈர்க்கும். அப்பொழுது அரபிக்கடலில் இருக்கக்கூடிய ஈரப்பதம் மிகுந்த காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படுகிறது. அவ்வாறு அந்த ஈரம் இருந்த காற்று தமிழகத்தை தாண்டி வரும்போது மழை வருகிறது .

 

இந்த மழை அடுத்து வரக்கூடிய மூன்று நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசானது முதல் மிதமான மழையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக இருக்கும் திருவள்ளூர், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் என 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply