தோஹாவுக்கு புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னை திரும்பிய தரையிறக்கப்பட்டது. நேற்று இண்டிகோ 6c1707 விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவில் 245 பயணிகளுடன் புறப்பட்டது. சுமார் 40 நிமிடங்கள் பறந்த பின்னரும் சரக்கு பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து மீண்டும் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உள்நாட்டு வான் போக்குவரத்து பொது இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீண்டும் சில மணி நேரங்களுக்குப் பின் பயணித்ததாக விமான நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply