திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பெரியார் அண்ணா நிலையத்திற்கு சென்ற உதயநிதி தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மொழித் திணிப்புக்கு தான் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும், மீண்டும் இந்தியை திணிக்க முயற்சித்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினார்.ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்ததாக குறிப்பிட்ட உதயநிதி முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!