சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஹில்ரமாணி பிறப்பித்த உத்தரவுகள் மாற்றியமைக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா செய்வதற்கு முன்பாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறிப்பாக வழக்கை விசாரித்த நீதிபதி அமர்விலேயே அவமதிப்பு வழக்கை பட்டியலிட கூடாது என அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிலை கடத்தல் வழக்கு நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவன் அமர்வில் இருந்து மாற்றப்பட்டது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு நீதிபதிகள் சிவஞானம் பவானி சுப்பராயன் அமர்வில் இருந்து நீதிபதிகள் சிவஞானம் தாரணி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தற்போது தலைமை நீதிபதி தஹில்ரமாணி பதவி விலக ஏற்கப்பட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பழைய வழக்குகளை போட்டியிடுவது குறித்து அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






