கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்க கோரி பேராசிரியர்கள் வற்புறுத்தல்!

பாலியல் புகார் அளிக்க கோரி மாணவியை வற்புறுத்திய நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி விடுதி காப்பாளரை கண்டித்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ இயங்கிவரும் உடற் பயிற்சி கல்லூரியில் முதல்வர் ஆப்ரஹாம்க்கும் பேராசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தெரிகிறது.

 

இதனால் கல்லூரி முதல்வரான ஆபிரகாமை பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர்கள் சிலர் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவி ஒருவரை ஒப்புக்கொண்ட விடுதி வார்டன் ஜோதி முதல்வர் ஆபிரகாம் மீது பாலியல் புகார் அளிக்க அவரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply