பிறந்த பெண் பச்சிளங் குழந்தையை வீசி சென்ற சம்பவம்!

கல்லூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கைவிடப்பட்ட பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி அருகே பொட்டலம் போன்று சுட்டப்பட்ட ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அதை ஊழியர்கள் பிரித்து பார்த்த போது தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் பிறந்து சில நிமிடங்களே ஆன அழகான பெண் குழந்தை துடித்துக்கொண்டிருந்தது.

 

செவிலியர்கள் அந்த குழந்தையை மீட்டு பிரசவ வார்டில் அனுமதித்து தொப்புள் கொடியை அகற்றி சுத்தம் செய்து சிகிச்சையளித்து இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைத்தனர். பெண்ணாக பிறந்ததால் குழந்தையை அனாதையாக விட்டுச் சென்றாரா இல்லையெனில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Leave a Reply