சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆக்கப் பணிகள் சட்டத்திட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் பொதுக்குழு கிட்டத்தட்ட 3000 உறுப்பினர்கள் பங்கேற்க கூடிய பெரிய பொதுக்குழு என்பது சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது.

 

அந்த பொதுக்குழுவில் தான் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்றார். முக்கியமான முடிவுகள் குறிப்பாக கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளை தேர்ந்தெடுக்கக் கூடிய நிகழ்வில் பொதுக்குழு இருக்கிறது. ஆக்கப்பணிகள் சட்டத்திருத்தம் தணிக்கை குழு அறிக்கை இது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply