கோவையில் தனியார் மருந்தகத்தில் வாங்கிய மாத்திரைகள் இரும்பு கம்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரும்புகடை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா பல் வலி காரணமாக தனியார் மருந்தகத்தில் மாத்திரை வாங்கியிருக்கிறார். வீட்டிற்கு வந்து மாத்திரை சாப்பிடுவதற்காக எடுத்த போது அதனுள் இரும்பு கம்பி இருந்தது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக மருந்தகத்தில் முஸ்தபா புகார் அளித்திருக்கிறார். அதற்கு ரக்சன் பயோடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து மாத்திரைகளை வாங்கியதாகவும், விற்பனை மட்டுமே செய்ததால் இதற்கு மருந்தகம் பொறுப்பல்ல எனவும் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து கவனக் குறைவுடன் மாத்திரையை தயாரித்த நிறுவனம் குறித்து சுகாதாரத் துறையில் புகார் அளிக்க உள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்தபா தெரிவித்துள்ளார்.






