பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறை குறித்த இலவச பயிற்சி முகாம் கோவையில் துவங்கப்பட்டது.பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நலமுடன் பல்லாண்டு வாழ சேவை வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி முகாம் கோவை கணபதி பகுதியில் உள்ள பண்டிட் தீன்தயாள் சிட்டிசன்ஸ் சர்வீஸ் சென்டரில் துவங்கப்பட்டது.
இதற்கான துவக்க விழா தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் டெக்கான் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக சேவா பாரத மாநில அமைப்பின் ராமநாதன் ஜி இலவச மையத்தை துவக்கி வைத்து பேசினார்.
இந்த மையத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள்,பெண்கள்மற்றும் இளைஞர்கள் என அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கான வழி முறைகளை இந்த மையத்தின் மூலமாக இலவச பயிற்சி அளிக்க உள்ளதாகவும்,மேலும் இது போன்று சேவையை தமிழகம் முழுவதும் விரிவு படுத்த உள்ளதாகவும் மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் கோவை கணபதி மக்கள் சேவை மையத்தின் குழுவினர்கள் மோகன்குமார், முத்துக்குமார், மனோஜ் குமார்,செல்வபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.