குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னையில் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 6,078 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதற்காக ஜப்பானின் சைக்கா நிறுவனத்திடம் நிதி உதவியும் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து 400mld யை கடல்நீரை குடிநீராக்கும் அளவுக்கு 6,078 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




