மோதிரத்தை கழற்ற முயன்றதால் கொலை!

இராமநாதபுரம் அருகே உள்ள எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியன் என்பவரின் மகன் முத்து ராக்கு வயது 61 ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் இவரும் கொட்டகை பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் மதன்குமார் வயது 27 என்பவரும் கண்ணந்தை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது முத்துராக்கு கையில் இருந்த மோதிரத்தை மதன்குமார் கழற்ற முயன்றுள்ளார் .இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராக்கு அவரை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் கிடந்த கடப்பாறையை மதன்குமார் எடுத்து முத்துராக்குவை குத்தினார். இதில் முத்துராக்கு பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக B1 போலீசார் மதன்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Leave a Reply