10 ரூபாய்க்கு வழங்கப்படும் வயிறும், மனதும் நிறைந்த உணவு!

காரைக்குடி அருகே இருக்கிறது இந்த உணவகம். சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், கூட்டு பொரியல்,அப்பளம் என வகை வகையான மதிய உணவுகள் அழகாக பரிமாறப்படுகிறது. இதன் விலை 10 ரூபாய் என்பதுதான் ஏழை எளிய நடுத்தர மக்கள் இங்கு குவிய காரணம். காலை நேரத்தில் இட்லி, தோசை, பொங்கல், பூரி வகைகள் பத்து ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கிறது. இதனை ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் அறக்கட்டளையின் வாயிலாக தொடங்கியுள்ளனர். ஒரு டீ பத்து ரூபாய்க்கு விற்கப்படும் காலகட்டத்தில் மதிய உணவை பத்து ரூபாய் என்பது அவர்களின் மனதையும் நிறைக்கிறது.


Leave a Reply