--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல்! அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

download (3)

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ச்சியாக இருந்து வரக்கூடிய நிலையில் வரும் நவம்பர் மாதத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும் என்று தொடர்ச்சியாக பல அமைச்சர்களின் பேட்டிகள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கொண்டு வந்தது. அதில் மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்றால். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது.

 

அதன் அடிப்படையில் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நகராட்சிகள் பஞ்சாயத்து யூனியன்களில் இருக்கக்கூடிய ஒன்றியங்கள் அளவில் இருக்கக்கூடிய மாநில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவை பிறப்பித்து தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

தமிழக அரசைப் பொறுத்தவரையில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உள்ளது. ஆவடி மாநகராட்சி சேர்த்து 13 உள்ளன. அதுபோல பஞ்சாயத்து யூனியன் களைப் பொறுத்தவரையில் 385 பஞ்சாயத்து யூனியன்கள் தமிழ்நாட்டில் உள்ளன.நகராட்சி பொருத்தவரை 125 டவுன் பஞ்சாயத்து, 521 கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரையில் 12618 பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ச்சியாகவே இந்த தேர்தலை நடத்த வேண்டுமென்றால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்தற்போது அதற்கான உத்தரவை மாவட்ட தேர்தல் ஆணையம் விதித்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon