வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி

மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பட்டதாரி இளைஞர்களிடம் பண மோசடி செய்த வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கத்தில் இயங்கிவந்த ஈ ஜாப் சென்று நிறுவனத்தில் ஹெச் ஆர் மேலாளராக இருந்தவர் ஆவடியை சேர்ந்த அருணா ஹன்சிகா.வேலை வாய்ப்புகளுக்கான இணையதளங்களில் வெளிநாடுகளில் வேலை வேண்டி விண்ணப்பித்த வைத்தவர்களை பட்டியல் போடுவது அவர்களின் வேலை என்று கூறப்படுகிறது.

 

பட்டதாரி இளைஞர்கள் தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வேலை என ஆசை காட்டி விசா செலவுகளுக்கு என்று கூறி ஈசாப் அந்த போலி நிறுவனம் தலா 50,000 ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் .ஈ ஜாப்ஸ் நிறுவனம் சென்று பார்த்தபோது பூட்டப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஆயிரம்விளக்கு போலீசில் புகார் அளித்தனர் போலி முத்திரைகள் மூலம் பணி ஆணைகள் மற்றும் தூதரக ஆணை கடிதம் தயாரித்து கொடுத்து ஏமாற்றியதாக போலீசில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த ஆயிரம்விளக்கு போலீசார் ஜாப்ஸ் உரிமையாளர் நிரூபன் சக்கரவர்த்தியை தேடிவருகின்றனர். ஆவடியை சேர்ந்த கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply